எங்களை பற்றி

 • “புதிய சூரியன்" என்னும் இந்த இணையதளம் 'திருச்செந்தூர் ஜோதிஷாலயம்" ஸ்ரீகர கிருஷ்ணராஜர் என்பவரால் துவங்கப்பட்டுள்ளது. ஸ்ரீகர கிருஷ்ணராஜர் இந்த இணையத்தை முழுவதும் ஜோதிடம் ஆன்மீகம் இந்து சமய மேன்மை சமய ஒற்றுமையை கருத்தில் கொண்டு துவங்கியுள்ளார்.

 • புதுவையை பிறப்பிடமாக கொண்ட ஜோதிடர் ஸ்ரீகர கிருஷ்ணராஜர் கோ.சீனுவாசக்கவுண்டர் - சின்னகண்ணம்மாள் ஆகியோரின் ஏக குமாரனாக பிறந்து புதுவையிலேயே கல்வி பயின்றவர். இளம் வயதிலேயே சமயம் இதிகாசங்கள் புராணங்கள் என தமிழின் உயர் நூல்கள் அனைத்தையும் பயின்றவர்.

 • இவரின் தமிழ்ப்பற்றையும் இலக்கியங்களில் உள்ள நுணுக்கமான அறிவாற்றலையும் பல தமிழ் அறிஞர்கள் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

 • புதுவை வானோலி மாமா என்றும் கம்பவாணர் என்றும் போற்றப்பட்ட புதுவை கம்பன்புகழ் புலவர் அருணகிரி அவர்கள் இவரின் சொல்லாராய்சியை 1992-ம் ஆண்டு வெகுவாக பாராட்டி போற்றினார். 1999-க்கு பிறகு இவரின் அனைத்து துறை ஆராய்ச்சியின் கவனம் ஜோதிடக்கலையின் மீது திரும்பியது. தான் ஜோதிடரானது ஸ்ரீமத் ராமாநுஜர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் திருவிளையாடல் மூலம் தான் என்று இவர் சாதிக்காத நாளில்லை ஜோதிடரான திருப்புமுனையை ஏற்று ஆண்டவன் இட்ட கட்டளையாக அப்பணியை அனைவருக்கும் வழங்க 1999-ம் ஆண்டு 'திருச்செந்தூர் ஜோதிஷாலயம்" என்றும் ஜோதிட நிலையத்தால் அனைவருக்கும் சேவை செய்து வருகிறார். தான் ஜோதிடர் மட்டும் இல்லை அனைத்து ஆன்மிக சமய கோட்பாடுகளையும் இந்து சமயத்தின் மிக சூட்சுமமான நுணுக்கங்களையும் அறிந்தவர் என்பதை தொலைகாட்சி பேட்டி மற்றும் நேரலை நிகழ்ச்கிகள் மூலம் நிருபித்துள்ளார்.

 • தொலைக்காட்சி நேரலையில் இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு இவரின் சிறந்த உண்மையான பதில் மூலம் அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்படுபவராக திகழ்கிறார்.

 • தமிழகம், புதுவை, கர்நாடகாவில் இவர் ஜோதிடர்களில் மாணிக்கமாக திகழ்கிறார் என்றால் மிகையாகாது.

 • ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், ஹீப்ரு பிரமீடு கணிதம், ஜெம்மாலஜி, கிராஃபாலஜி, நேமாலஜி, திருமண பொருத்தம், மனையடி சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஜோதிட மருத்துவம், புவியின் காந்த சக்தி ரகசியம், அண்ட வெளிகாந்த சக்தி ஓட்டம் என அனைத்து துறைகள் மற்றும் தெய்வீக ஆற்றல், அமானுஸ்ய சக்திகள் பற்றியான விஷயங்களை மிக நுனுக்கமாக கற்றவர்.

 • உலக பூலோக அமைப்பில் இந்தியா, தமிழகம், மற்ற மாநிலங்கள், அண்டை நாடுகள், நாம் வசிக்கும் நகரம், தொடங்கி நம் வீடு வரையான வாஸ்து விஷயங்களை இவர் விவரிக்கும் ஆற்றலை கண்டு வியக்காத ஜோதிடர்களோ, அறிஞர்களோ இல்லை எனலாம்.

 • பலதுறை ஜோதிடர்கள், ஆன்மிக வாதிகள், அரசியல் வாதிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், உயர் அதிகாரிகள், பிரபலங்கள், சினிமா துறையை சார்ந்தவர்கள் என இவரிடம் தன் சந்தேகத்தை தீர்த்து பயன்பெற்றவர்கள், பெருபவர்கள் புதுவாழ்வு பெற்றவர்கள், தன் துறையின் உச்சத்தை அடைந்தவர்கள் ஏராளம், ஏராளம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

 • இவரின் நீண்ட ஆராய்ச்சியின் பயனாக ஜோதிட மருத்துவம் எனும் ஆராய்ச்சியின் மூலமாக இவர் மிக புகழ்பெற்று விளங்குகிறார். ஒருவரது ஜாதகத்தை கொண்டு அவருக்கு என்ன வியாதி வரும் அது உடலின் எந்த பாகத்தை தாக்கும் என்று இவர் கண்டுபிடிக்கும் முறை மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளதை இவரின் மூலம் பயன் பெற்றவர்களே கூறுகிறார்கள். அப்படி வந்த வியாதிக்கு அவரவரின் ஜாதகப்படி எந்த முறை மருத்துவம் ஏற்றது என்றும் இவர் முறைபடுத்துகிறார். கிரகங்களின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்றவாறு ஹோமியோபதியா? ஆயுர்வேதமா? சித்த மருத்துவமா? அக்குபஞ்சரா? அறுவை சிகிச்சையா? ஆங்கில மருத்துவமா? என்று வகைப்படுத்தி அனைவருக்கும் மிகபெரிய செல்வமான நோயற்ற வாழ்வை வாழ உதவிபுரிகிறார்.

 • இந்தியாவில் அனைவரும் பொதுவாக பயன்படுத்தி வந்த பிரமீடை தேவைக்கேற்ற சக்தியை உள்வாங்கும் விதமாக யந்திய சக்தியை எப்படி பயன்படுத்துவது என்று முதன்முதலில் கூரியவர் இவர்தான்.

 • இவர் உருவாக்கும் செப்பு பிரமீடு மிக பிரசித்தி பெற்றதாகும். மிக வீர்யமான அதிர்வலைகளை உண்டாக்கி எதிர்மறை சக்தியை போக்கி நேர்மறை சக்தியை வழங்கும் விதமாக அமைத்துள்ளார்.

 • மேலும் செப்பின் மூலக்கூறு பிரமீடு வடிவத்தில் உள்ளதால் அனைவரும் எழுதும் விதமாக கீழ் அழுத்தும் விதத்தில் உண்டாக்காமல்; மேலெழுதும் விதமாக அதாவது பிரைல் முறையில் அனைத்து அட்சரங்களையும் எழுத்துகளையும் வடிவங்களையும் உள் பக்கம் திருப்பி தலைகீழாக வடிவமைத்து தயாரிப்பது இது வரை எவராலும் செய்யமுடியாத ஒன்றாகும். இது இவரின் மிக தனித்திறமையால் உண்டானதாகும். இதனை பயன்படுத்தியவர்கள் 24 நாட்களில் நடக்காத காரியத்தையும் நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள் என்பது அவரவரின் வெற்றி மட்டுமல்லாது இவரின் மிகப்பெரிய வெற்றியாகும்.

 • இவர் மனையடி கணித்து வாஸ்து முறையில் உண்டாக்கும் வீட்டு பிளான் அப்படியே வீடு கட்ட ஏற்றதாக உள்ளது, மனையடியில் உள்ள 15 வித கணக்குகளை கணித்து ஆராய்ந்து எப்படி அளவீடுளை பயன்படுத்த வேண்டும் என்று கூறும் சிலரில் இவர் குறிப்பிடத் தகுந்தவர் அதற்கு பிறகு தான் வாஸ்து என்பது இவரின் கூற்று இவரின் மனையடி வாஸ்து இதுவரை யாரும் பயன்படுத்தாத அல்லது கூறாத வகையில் விஞ்ஞான ரீதீயில் உள்ளதை ஆன்மீக நாட்டம் இல்லாதவர்கள், நாத்திக வாதிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது இவரின் தனிச்சிறப்பு.

 • இவரின் தனித்திறமைகளையும், ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களையும் இந்த முன்னுரையிலேயே கூறமுடியுமா என்றால் முடியாது என்ற தான் கூறவேண்டும்.

 • அனைவரும் மகிழ்ச்சியுடனும், உயர்வுடனும், ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும் அனைத்து மக்களும் பயன்பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இந்த இணையதளத்தை துவக்கியுள்ளார் இவர்.

 • இந்த இணையதளத்தில் மிக விரைவில், நாளைய பலன் எனும் வீடியோ நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு ஜோதிடரும் கூறாத வகையில் இந்த நிகழ்ச்சி மிக துல்லியமாக இருக்கும் என்பதை நீங்கள் தினமும் நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொறு தினத்தின் சிறப்பும் இராசி, நட்சத்திரம் தெரியாதவரும் அன்றைய தினம் என்ன செய்யலாம் என்பதையும் சூரிய உதயம், அஸ்தமனம் அன்றைய பகல் பொழுது ஆகியவற்றின் அடிப்படையில் இராகு காலம், எமகண்டம், குளிகை காலம் மிக துல்லியமாக கணித்து வழங்க இருக்கிறார் என்பது தனிச்சிறப்பாகும்.

 • இவரின் அனைத்து வீடியோக்களும், உங்கள் பார்வைக்கு கிடைக்கும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாதகம் மிக துல்லியமாக கணிக்கவும், பார்க்கவும், வாஸ்து பார்க்கவும் மனையடி கணிக்கவும், ஜோதிட மருத்துவம் பார்க்கவும், ஹீப்ரு முறையில் எண்கணித பெயர் மாற்றம் செய்யவும் பிரமீடு சக்தி மூலம் பயன்பெறவும் இவரின் ஆலோசனை பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம். இவரை சந்திக்க முன் அனுமதி பெற்று வரவும்.

 • நன்றி!
  வணக்கம்